Friday, January 31, 2014


பூம்புகார் துறைமுகம் -ஓவியம்
ஓவியர்.ஆர்.ராஜராஜன்


"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலில் வந்த கருங்கறி மூடையும்
வடமலை பிறந்த மணியும் பொன்னும்
குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணக்கடற் றுகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும் "

என விளித்துக்கூறப்பட்ட புகாரின் துறைமுகம் பல தேசத்து வணிகர்களின் உறைவிடமாக திகழ்ந்ததாக பட்டினப்பாலை,சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்கள் காலககன்ணாடியாக உருவகப்படுத்துகின்றன.இயற்கையாலும், அரசியல் மாற்றங்களாலும், நமது அறியாமையாலும்
தமிழகம் இழந்த பெருமையை மீண்டும் பெற்றிட வரலாறுகளை மீண்டும் வாசிப்போம். எதிர்கால தமிழகம் குறித்து யோசிப்போம்.நாமும் உயர்ந்து
உலகையும் உயர்த்துவோம்


.
சங்ககால பூம்புகார் துறைமுகம் -கற்பனை ஓவியம்

1 comment:

  1. உங்களுடைய இயேசுவின் கடைசி விருந்து கொலாஜ் ஓவியம் மிக அழகாக இருந்தது சார்,உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்...

    ReplyDelete